×

கொரோனா முடிவுக்கு பின், 500 வழக்கமான ரயில்கள் நிறுத்தம்.. 10,000 நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காது : இந்திய ரயில்வே அறிவிப்பு!!

சென்னை : கொரோனா பெருந்தொற்று முடிவடைந்து ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் , சுமார் 500 வழக்கமான ரயில்கள் நிறுத்தப்படும் என்றும், மேலும் இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 10,000 நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காது என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த புதிய “பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை(ஞீமீக்ஷீஷீ ஙிணீsமீபீ ஜிவீனீமீtணீதீறீமீ)” மூலம் ரயில்வே ஆண்டு வருவாயை ரூ .1,500 கோடிக்கு மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட கூடுதல் வருவாயை, கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை உயர்த்தாமல் பெற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது கால அட்டவணையின் துணை விளைபொருளாக இருக்கும், மேலும் இது செயல்பாட்டு கொள்கை மாற்றங்களின் விளைவாக நடக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய கால அட்டவணை 15 சதவிகிதம் அதிகமான சரக்கு ரயில்களை பிரத்தியேக தடங்களில் அதிக வேகத்தில் இயக்க இடமளிக்கும். பயணிகள் ரயில்களின் சராசரி வேகம் நெட்வொர்க் முழுவதும் சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை என்பது, வளங்கள் அற்ற பூஜ்ஜிய இடத்தில் இருந்து மீண்டும் கற்பனை செய்ய முற்படுவதால் வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. பாம்பாய் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இந்திய ரயில்வே. கொரோனா ஊரடங்களால் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு போது இதற்கான வேலைகள் ஆரம்பமாகின. இந்த நவீன இயக்கக் கருவியை உருவாக்குவது ரயில்வேயின் முன்னுரிமையாக இருந்தது, இதனை உயர் மட்டக்குழு கண்காணித்து வந்தது.

இருக்கும் வளங்களை உகந்ததாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்தை வழங்குவதற்கான நிறுவன இலக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு ரயில் மற்றும் நிறுத்தத்தின் இருப்பினை நியாயப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கால அட்டவணை உருவாக்கப்பட்டது. கால அட்டவணையின் விவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் சில அதில் இடம் பெற்ற சில முக்கிய கொள்கைகள் பின்வருமாறு :

ஒரு வருடத்தில் 50%க்கும் குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்கள் இனி இயக்கப்படமாட்டாது. தேவைப்பட்டால் அந்த ரயில்கள் பிரபலமான ரயில்களுடன் இணைக்கப்படும்.

நீண்ட தூர ரயில் பயணங்களில், முக்கிய நகரங்கள் அல்லது இடங்கள் இல்லாதபட்சத்தில், 200 கி.மீக்கு இடையே எந்த நிறுத்தமும் இருக்காது. இந்த நெட்வொர்க்கில் சுமார் 10 ஆயிரம் நிறுத்தங்கள் பட்டியலிடப்பட்டு அழிக்கப்படும். ஆனால் அனைத்து ரயில்களும் அங்கே நிற்காது என்று கூற முடியாது. சில உள்ளூர் ரயில்கள் அதன் சேவைகளை அந்த நிறுத்தங்களில் தொடர்ந்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அனைத்து பயணிகள் ரயில்களும் “ஹப் அண்ட் ஸ்போக் மாடலில்” இயங்கும். “ஹப்” என்பது ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களாக இருக்கும், அங்கு அனைத்து நீண்ட தூர ரயில்களும் நிறுத்தப்படும். கால அட்டவணையின்படி, சிறிய இடங்களை இணைப்பு ரயில்கள் மூலம் ஹப்களில் இணைக்கப்படும். “முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் புனித யாத்திரை மையங்களும் ஹப்களாக வகைப்படுத்தப்படும்” என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

புறநகர் ரயில்சேவைகளில் எந்த மாற்றமும் இல்லாததால் மும்பை புறநகர் வாசிகள் இந்த மாற்றங்களால் எந்த பாதிப்பிற்கும் ஆளாக மாட்டார்கள்.

கால அட்டவணை ரயில்வேயில் கிடைக்கும் ரோலிங் ஸ்டாக்கின் பயன்பாட்டை அறியும். ரயில்களில் 22 லிங்கே ஹோஃப்மேன் புஷ் (லிவீஸீளீமீ பிஷீயீனீணீஸீஸீ ஙிusநீலீ)(எல்.எச்.பி) பெட்டிகள் அல்லது அல்லது 24 இண்டெக்ரல் கோச் ஃபேக்ட்ரி (ஐ.சி.எஃப்) பெட்டிகள் இருக்கும். எல்.எச்.பி கோச்கள் முக்கியமாக கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் உருவாக்கப்படும். ஐ.சி.எஃப் பெட்டிகள், தற்போது ரோலிங் ஸ்டாக்கில் பெரும்பகுதியை கொண்டுள்ளது. ஆனால் அவை படிப்படியாக அகற்றப்படும், அவை சென்னையின் பெரம்பூரில் உருவாக்கப்பட்டது. 18-பெட்டிகள் கொண்ட இரவு ரயில்களைப் பயன்படுத்துவதற்கும் கால அட்டவணை திட்டமிட்டுள்ளது. இந்த தரப்படுத்தலுக்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது, மேலும் ஐ.ஐ.டி-பம்பாய் வல்லுநர்கள் ரயில்வேயின் செயல்பாட்டு நிபுணர்களுடன் இணைந்து மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர். அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் -19 நிலைமையைப் பொறுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கால அட்டவணையை வெளியிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை இறுதியில் ரயில்வே கால அட்டவணை செயல்பாட்டில் இருப்பதாக கூறியது, ஆனால் வேறெந்த விபரமும் வழங்கப்படவில்லை.

“ரயில் நடவடிக்கைகள் பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் பகல்நேர பராமரிப்பு ஆகியவற்றிற்கான பிரத்யேக பகுதிகளாக பிரிக்கப்படும். நாங்கள் இப்போது கால அட்டவணையை செயல்படுத்தியிருப்போம், ஆனால் கோவிட் -19 நிலைமை காரணமாக எங்களால் அதை செய்ய முடியவில்லை. நாங்கள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கும்போது அது நடக்கும் ”என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் வி கே யாதவ் ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்

Tags : end ,Corona ,Indian Railways ,announcement , After the end of the Corona, 500 regular trains will stop .. Trains will not stop at 10,000 stops: Indian Railways announcement !!
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...