×

சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!!

சென்னை: சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி செயல்பட தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இபாஸ் முறையை ரத்து செய்து ஏராளமான தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய அறிவிப்பில் வரும் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட  அனுமதிக்கப்படுகிறது.        

இந்த நிலையில் தற்போது சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

* செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்

* பரங்கிமலை - சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 9 ம் தேதி முதல் இயக்கப்படும்

* அலுவலக நேரமான காலை 8.30 - 10.30, மாலை 5-8 வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்

* நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

* சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏர்போர்ட் மெட்ரோவுக்கு வசதி கிடையாது.

* அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

* காற்றோட்டத்திற்காக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 20 விநாடிகளுக்கு பதிலாக 50 விநாடிகள் மெட்ரோ ரயில் நிற்கும்.

* ஸ்மார்ட் கார்டு மற்றும் QR ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும்.

* லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 3 பேர் வரை மட்டுமே அனுமதி.

* தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில், X குறியிடப்பட்ட இருக்கையுடன் சிறப்பு ஏற்பாடுகள்.

* அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படும்.

* தானியங்கி படிக்கட்டுகளில் ஒரு படி இடைவெளி விட்டு பயணிகள் செல்ல வேண்டும்.

* முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயிலில் செல்ல அனுமதி இல்லை.

* நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு மெட்ரோ ரயிலில் செல்ல அனுமதி இல்லை.

Tags : Metro Rail Administration ,Metro Rail ,Chennai ,Administration ,Announcement , Chennai, Metro Rail, Administration, Announcement
× RELATED யுபிஎஸ்சி தேர்வர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு