×

இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை : சவரன் ரூ.272 குறைந்து ரூ.39,016க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.39,016க்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கம் நிலவுகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.தங்கம் விலை மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 28ம் தேதி ஒரு பவுன் ரூ.39,176க்கும், 29ம் தேதி ரூ.39,416க்கும் விற்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி ஒரு பவுன் ரூ.39,776க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து ஒரு பவுன் ரூ.39,288க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.53 குறைந்து  ரூ.4,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.80 குறைந்து ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதும், பின்னர் சிறிது விலை குறைவதுமாக இருப்பதால் நகை வாங்குவோரை யோசிக்க செய்துள்ளது. ஆனாலும், தற்போது திருமண சீசன் என்பதால், பலரும் நகைக்கடைகளுக்கு சென்று தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

Tags : Shaver , Gold on the decline: Shaver down Rs 272 to Rs 39,016
× RELATED வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம்...