×

சென்னையில் காவலர் ஒருவர் கந்துவட்டி பிரச்சனையில் இளைஞரை தாக்கியதாக குற்றச்சாட்டு..!! - அத்துமீறிய காவலர் பணியிடை மாற்றம்.!!!

சென்னை:  சென்னையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் விடுதி ஒன்றில் வைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் கந்துவட்டி பிரச்சனைக்காக காவலர்கள் பலர் ஒரு தரப்பிடமிருந்து அதிகளவு பணத்தை பெற்று கொண்டு, எதிர் தரப்பினரை மிரட்டி பணத்தை திரும்ப பெற வைக்கின்றனர். இதனால் அதிகளவு பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்களே. இதுபோன்ற காவலர்களின் அத்துமீறிய செயல்களை முற்றிலுமாக ஒழிக்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் இதுபோன்ற தொடர் சம்பவம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதாவது சென்னையில் கந்துவட்டி பிரச்சனைக்காக இளைஞர் ஒருவரை காவல் ஒருவர் அழைத்து சென்று தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த திலீப் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பிரவீனிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப தரவில்லை என்பது புகாராகும். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டதாக திலீப் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை என வேப்பேரி போலீசில் பிரவீன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், திலீப்பை அழைத்துச்சென்ற போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், தனி அறையில் வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். பின்னர், இதுதொடர்பாக திலீப் காவல் துறை அதிகாரிகள் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறை மற்றும் மனித உரிமை ஆணையம், சென்னை வேப்பேரி காவலர் பூபதி என்பவரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் மீண்டும் தொந்தரவு செய்வதாக திலீப் தெரிவித்துள்ளார்.

Tags : policeman ,Chennai ,Transfered , policeman ,Chennai, assaulting youth
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...