×

ஆன்லைன் வகுப்பு புரியாததால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை: ஆண்டிபட்டி அருகே சோகம்

ஆண்டிபட்டி: ஆன்லைன் வகுப்பு புரியாததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆண்டிபட்டி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். கரூர், தோகைமலை தனியார் குவாரியில் மேலாளராக உள்ளார். இவரது மகன் விக்கிரபாண்டி (16), ஒரு மகளும் உண்டு. விக்கிரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கரூரில் வசித்து வந்த இளங்கோவன் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

முன்னதாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தபடி விக்கிரபாண்டி ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார். சொந்த ஊருக்கு வந்த பின் ஆன்லைன் வகுப்பில் படிக்காமல் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அதுபற்றி கேட்ட அப்பாவிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கோவன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விக்கிரபாண்டி நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பெற்றோர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்கிரபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் புரியாததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

* நீட் ஹால் டிக்கெட் பெற முடியாததால் மாணவி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகள் ஹரீஸ்மாஸ்ரீ (17). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஹரிஷ்மாஸ்ரீ சிறுவயது முதலேயே டாக்டராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்துள்ளார். இதற்காக பள்ளியின் மூலமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். ஹரீஸ்மாஸ்ரீ ஆன்லைனில் நீட் ஹால்டிக்கெட் எடுப்பதற்கான ஐடியை மறந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே, சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை மாணவி தொடர்பு கொண்டபோது ஐடி-யைகூட குறித்து வைக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டாயே என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், டாக்டர் கனவு கலைந்துவிடுமோ என்ற மன உளைச்சலில் இருந்த ஹரீஸ்மாஸ்ரீ 29ம் தேதி வீட்டில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

Tags : student ,Andipatti ,suicide ,Tragedy , Online class, plus 1 student, suicide, antipathy tragedy
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...