×

சென்னையில் ரூ.1,000 பஸ் பாஸ் விற்பனை: எம்டிசி பயணிகள் ஆர்வம்

சென்னை:சென்னை மாநகர் போக்கு வரத்துக்கழத்திற்கு செந்தமாக 33 பணிமனைகள் உள்ளன. தினசரி 673 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், தினசரி தொராயமாக 36 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பயணிகளில் எல்லாவித மாநகர பஸ்சிலும் பயணிக்க வசதியாக மாதாந்திர பயண அட்டை ரூ.1,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நிலையில் கொரோனா காரணமாக பஸ் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் மீண்டும் சென்னையில் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது. இதையடுத்து பாஸ் விநியோகத்தை உடனடியாக துவங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அனைத்து போக்குவரத்துக்கழகங்களும் பயணிகளிடத்தில் மாதாந்திர பாஸ் விநியோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும். பணப்பரிவர்த்தனைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து மீண்டும் மாதாந்திர பாஸ் விற்பனை நேற்று 29 இடங்களில் துவங்கியது. இதை எம்டிசி பயணிகள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

Tags : passengers ,bus pass sale ,Chennai ,MTC , Chennai, Rs.1,000 bus pass, sale, MTC passengers, interest
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...