×

தங்கம் சவரனுக்கு ரூ.424 குறைந்தது

சென்னை: சென்னையில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.424 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.39,288க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்பிறகு கடந்த 7ம் தேதி முதல் ஒரு வாரம் விலை குறைய ெதாடங்கியது. ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 28ம் தேதி ஒரு பவுன் ரூ.39,176க்கும், 29ம் தேதி ரூ.39,416க்கும் விற்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி (நேற்று முன்தினம்) காலை தங்கம் விலை மேலும் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,972க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.39,776க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலையில் லேசான சரிவு காணப்பட்டது. அதன்படி ஒரு கிராமிற்கு ரூ.53 குறைந்து ரூ.4,911க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.424 குறைந்து ஒரு பவுன் ரூ.39,288க்கு விற்கப்பட்டது. அதேபோன்று, வெள்ளி ஒரு கிராம் ரூ.74.90க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதும், பின்னர் சிறிது விலை குறைவதுமாக இருப்பதால் நகை வாங்குவோரை யோசிக்க செய்துள்ளது. ஆனாலும், தற்போது திருமண சீசன் என்பதால், பலரும் நகைக்கடைகளுக்கு சென்று தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

Tags : Gold, Rs 424 per razor, low
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...