×

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் தற்கொலை செய்த மாணவி சடலம் எரிந்த தகனமேடையில் குதித்த வாலிபர் உடல் கருகி பலி? சுடுகாட்டில் கிடந்த சாம்பலில் வாட்ச், செல்போன் பாகம் கண்டெடுப்பு

உளுந்தூர்பேட்டைடை அருகே மேட்டுநன்னாவரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் மகள் நித்யஸ்ரீ(19). இவர் நர்சிங் படித்து வந்தார். இவருக்கும், இவரது இரண்டு சகோதரிகளுக்கும் ஒரே செல்போனில் ஆன்லைன் பாடம் படிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதில் தந்தை திட்டியதால் மனமுடைந்த நித்யஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேட்டுநன்னாவரம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

இந்தநிலையில் அன்றிரவு 11 மணி அளவில் நித்யஸ்ரீயின் சடலம் எரிந்து கொண்டு இருந்தபோது ஆண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக எரியூட்டும் பணியில் ஈடுபட்டவர்கள், கிராமத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் திருநாவலூர் காவல் நிலையத்தில் மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், ‘தனது மகன் ராமு (20) ஐடிஐ முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை. ராமுவின் நண்பர்களிடம் விசாரித்தபோது நித்யஸ்ரீ சடலம் எரிந்து கொண்டு இருந்தபோது அந்த சுடுகாடு பகுதியில் இரவு நேரத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததாக தெரிவித்தனர். எனவே தனது மகன் சடலம் நித்யஸ்ரீயின் சடலத்துடன் தீயில் கருகியதா என்பது குறித்து சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்து இருந்தார்.

இதன்பேரில், மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜி, திருநாவலூர் போலீசார் நேற்று மாலை சுடுகாட்டுக்கு சென்று எரிந்து கிடந்த சாம்பலை கலைத்து பார்த்தனர். அப்போது அந்த இடத்தில் ஒரு வாட்ச், செல்போன் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கருகி கிடந்ததை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் சில எலும்புகளை தடயவியல் நிபுணர் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜிகுமார் கூறுகையில், ‘சம்பவத்தன்று இரவு நித்யஸ்ரீயின் சடலம் எரிந்து கொண்டு இருந்தபோது ஒரு வாலிபர் திடீரென தீயில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதேநாளில் ராமுவும் இந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்ததாக தெரிவித்தனர். எரியூட்டப்பட்ட சாம்பலில் இருந்து ஒரு கருகிய வாட்ச், செல்போன் உதிரி பாகங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர் எலும்புகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளார். அதன் முடிவுக்கு பிறகு தீயில் கருகியது யார் என்பது தெரியவரும்’ என்றார். மாணவி எரிந்த சடலத்தில் வாலிபர் விழுந்து கருகியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Student ,suicide ,crematorium , Online class, lack of cell phone, suicide, student corpse, burnt crematorium, jumping teenager, body charred?
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...