×

பிரிட்டன், நெதர்லாந்தில் இருந்து ரூ.7 லட்சம் போதை மாத்திரை கடத்தல்

சென்னை: பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கொரியர் பார்சல்கள் வந்தது. அந்த பார்சல் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். 4 பார்சல்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் மற்றும் அலங்கார ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 2 பார்சல்கள் சென்னை, ஒரு பார்சல் நாமக்கல், ஒரு பார்சல் உதகமண்டலம் முகவரிக்கு வந்திருந்தன. அந்த பார்சல்களை தனித்தனியே எடுத்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து பார்சல்களை பிரித்து சோதனையிட்டனர். அந்த பார்சல்களில் விலை உயர்ந்த போதை மாத்திரைகள் 215, மற்றும் போதை பவுடர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவைகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம். மேலும் விசாரணையில் கொடுக்கப்பட்ட முகவரிகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் வழக்கு பதிவு செய்தனர். இந்த போதை மாத்திரைகள் யாருக்காக கொண்டு வரப்பட்டது. யார் போதை மாத்திரைகளை அனுப்பியது என விசாரிக்கின்றனர்.


Tags : Netherlands ,UK , 7 lakh in UK, Netherlands, drug, smuggling
× RELATED நெதர்லாந்திலிருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்