திருவள்ளூரில் எஸ்.எம்.கிளினிக் திறப்பு விழா: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர், நேதாஜி சாலையில் எஸ்.எம்.கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர் டி.என்.ஆர்.சீனிவாசன், விஜியா சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினார். டி.என்.ஆர்.ரகு, எஸ்.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் எஸ்.சங்கீதா சீனிவாசன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் இந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்தினார். டாக்டர் மு.குமரன் கிளினிக்கை திறந்து வைத்தார்.

விழாவில் டாக்டர் அண்ணாதுரை, திமுக நகர செயலாளர்கள் காஞ்சிபுரம் சன் பிராண்ட் கே.ஆறுமுகம் சி.சு.ரவிச்சந்திரன், ச.மகாலிங்கம், அதிமுக மாநில பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் கமாண்டோ ஏ.பாஸ்கரன், பொன் பாண்டியன், ஏ.பிரகாசம், பெப்ஸி தாமு, தே.சிவபாதம், கே.பி.பாண்டுரங்கன், லஷ்மி பள்ளி தாளாளர் ராஜேந்திர பாபு, வி.குப்பண்ணா, சண்முகம், ஒப்பந்ததார்கள் ராஜாராவ், சுதாகர், எஸ்.பி.ஆர்.பாபு, க.தமிழ்ச்செல்வன், துரைமுருகன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Related Stories: