×

பூவை மூர்த்தி நினைவுதினம் புரட்சி பாரதம் கட்சியினர் அஞ்சலி

காஞ்சிபுரம்: புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை மூர்த்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு காஞ்சி நகர, ஒன்றிய புரட்சி பாரதம் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை மூர்த்தியின் நினைவு தினம் அக்கட்சியினரால் மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் நகர செயலாளர் கராத்தே ராயப்பன், ஒன்றிய செயலாளர் கூரம் செல்வம் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் அடுத்த கூரம், வெள்ளைகேட், காஞ்சிபுரம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பூவை மூர்த்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் தனசேகரன், மாவட்ட தலைவர் பரணிமாரி தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Revolutionary Bharat Party ,Pooja Murthy Memorial Day Tribute , Poovai Murthy Memorial Day, Revolutionary Bharat Party, Tribute
× RELATED புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர்...