×

தமிழகத்தில் 85 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 85 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், மணலி இன்ஸ்பெக்டராக இருந்த கமலக்கண்ணன் சென்னை வேப்பேரி உதவி கமிஷனராகவும், சென்னை திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேந்திரன் சென்னை எண்ணூர் உதவி கமிஷனராகவும், சென்னை கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த அன்பரசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும்,சென்னை சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சிவராஜன் தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஎஸ்பியாகவும், சென்னை சிபிசிஐடி மெட்ரோ பிரிவி இன்ஸ்பெக்டராக இருந்த வேல்முருகன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும்,

சென்னை உளவுத்துறை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சென்னை உளவுத்துறை டிஎஸ்பியாகவும், சென்னை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ராஜபால் சென்னை மெரினா கோட்டை உதவி கமிஷனராகவும், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டராக இருந்த இருதயம் சென்னை மாநகர நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராகவும், சென்னை எண்ணூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை மடிப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த பாண்டி சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த துரை சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பியாகவும்,

சென்னை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த குணவர்மன் சென்னை சிறைத்துறை நுண்ணறிவு பிரிவு விஜயலென்ஸ் டிஎஸ்பியாகவும், சென்னை தலைமையிட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக இருந்த டெல்லிபாபு காஞ்சிபுரம் போதை தடுப்பு பிரிவு நுண்ணறிவு சிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை பூந்தமல்லி இன்ஸ்பெக்டராக இருந்த கிரி சென்னை தலைமையிட க்யூ பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை தமிழ்நாடு கமாண்டோ பள்ளி இன்ஸ்பெக்டராக இருந்த சத்தியசீலன் சென்னை நகர ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு சிபிசிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை ஆயிரம்விளக்கு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ராஜசேகரன் வடபழனி உதவி கமிஷனராகவும், சென்னை தலைமையிட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக இருந்த சரவணக்குமார் சென்னை ஊரக சுகாதாரப்பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை அடையார் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்ராக இருந்த கிரிஸ்டின் ஜெயசீலி சென்னை உளவுத்துறை டிஎஸ்பி என தமிழகம் முழுவதும் 85 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

* பதவி உயர்வு இழந்த 6 இன்ஸ்பெக்டர்கள்
தமிழக காவல் துறையில் 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த 91 இன்ஸ்பெக்டர்களில் 85 இன்ஸ்பெக்டர்களுக்கு தற்போது டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 6 இன்ஸ்பெக்டர்கள் பணி காலத்தில் அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் காரணமாக துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் டிஎஸ்பி பதவி உயர்வை இழந்துள்ளனர். குறிப்பாக வடபழனி காவல் நிலையத்தில் லஞ்சம் புகாரால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் கண்ணன், மெரினா இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் விசாரணைக்கு அழைத்து சென்ற இரண்டு வியாபாரிகள் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய சாத்தாங்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 6 பேர் பதவி உயர்வு இழந்துள்ளனர்.

Tags : Prabhakar ,inspectors ,Tamil Nadu , In Tamil Nadu, 85 Inspectors, DSP Promotion, Home Secretary Prabhakar, Order
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...