×

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் தத்தளிக்கிறது இந்தியா

புதுடெல்லி: பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் நாடு தத்தளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 2020-2021ம் ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை நேற்று முன்தினம் அமைச்சகம் வெளியிட்டது. இதில், கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் ஜிடிபி.யானது -23.9 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது,’  என குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், எந்தெந்த துறைகளில் என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் அவர் பட்டியலிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பாதிப்பு பட்டியல் வருமாறு:

பாதிப்புகளை பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்
1 வரலாற்றில் இதுவரையில் காணாத அளவு ஜிடிபி -23.9 சதவீதம் சரிவு.
2 கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.
3 பன்னிரெண்டு கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
4 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பாக்கியை மத்திய அரசு செலுத்தவில்லை.
5 உலகிலேயே அதிக அளவு கொரோனா நோய் தொற்று தினசரி பாதிப்பு மற்றும் உயிர் இழப்பு.
6 எல்லைகளில் வெளிநாடுகள் ஆக்கிரமிப்பு.

Tags : Modi ,India ,disasters , Modi, the catastrophe created, staggers, India
× RELATED உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி...