×

அண்ணாநகர் தொகுதி திமுக எம்எல்ஏக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக அமைச்சர்கள் கே. பி. அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி, நிலோபர்கபில், விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அதிமுகவை சேர்ந்த பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன், மதுரை தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திமுகவைச்சேர்ந்த திட்டக்குடி எம்.எல்.ஏ., கணேசன், செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம், கார்த்திகேயன், குளித்தளை ராமர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிள்ளியூர் ராஜேஷ்குமாரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை பாதிக்கப்பட்ட 33 எம் எல் ஏக்களிலில் பெரும்பாலானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று நலமடைந்தனர். சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் (66).

இவருக்கு நேற்று முன் தினம் இரவு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இவரை இவரது குடும்பத்தினர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மற்றும் ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செயயப்பட்டது. இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : MLA ,DMK ,constituency ,Anna Nagar ,hospital , Anna Nagar constituency, DMK MLA, Corona, hospital admission
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா