பப்ஜி ஆப்புக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு: மேலும் 118 மொபைல் செயலிகளுக்கு தடை

டெல்லி: இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் 18 கோடி பேர் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே பப்ஜி விளையபடுபவர்களில் 24% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு செயலிகளால் இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு எழுந்தது.

கோடிக்கணக்காண குழந்தைகள், இளைஞர்கள் செயலிகளில் மூழ்கி கிடப்பதால் செயல்திறன் பாதிப்பதாக கூறப்படுகிறது. பப்ஜி, பெய்டு, கட்கட், ஷேர்சேவ், கேம்கார்டு, பிட்டு, சைபர் ஹன்டர், நைவ்ஸ் அவுட்டர், லூடோ வேர்ல்டு, செஸ் ரஷ், ரைஸ் ஆப் கிங்டம், வார்பாத். டாங்டேங்க்ஸ், கேம் ஆப் சுல்தாகன்ஸ், ஊவ் மீட்டிங், சூப்பர் கிளீனிங் உள்ளிட்ட சீனா மற்றும் வெளிநாட்டு செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. யோக்கு, ரோட் ஆப் கிங்ஸ், பென்குயின், விபிஎன் பார் டிக்டாக், பைகாஸ், ஐபிக், ரைட் அவுட் ஹீரோஸ், சோல் ஹன்டர்ஸ் உள்ளிட்ட செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>