×

தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் சுமார் 200 தலிபான்கள் விடுவிப்பு!

காபூல்: அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் சுமார் 200 தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர,அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.  இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியங்களில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது.ஆனால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருவோம் எனவும் தங்கள் பிடியில் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் பயங்கரவாதிகள் கெடு விதித்தனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த் ஒப்பந்தத்தின் பேரில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கன் அரசு விடுவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தலைமை சிறைச் சாலையிலிருந்து 200 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாகவே தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர், என்று தெரிவித்துள்ளனர்.Tags : Taliban ,peace talks ,Afghanistan , Taliban, peace talks, Afghanistan, liberation
× RELATED விடுதலை எப்போது? பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரபரப்பு கடிதம்