×

25 கி.மீ உடலைத் தூக்கிச் சென்ற இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்களின் மனித நேயம்

பித்தோராகர்: இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) வீரர்கள் சமீபத்தில் இறந்த ஒருவருடைய உடலை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க சியுனி கிராமத்தில்கிருந்து அந்த நபரின் முன்ஸ்யாரி கிராமத்தை அடைய, சுமார் 8 மணி நேரம் உடலை சுமந்து கொண்டு 25 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளனர். உத்தராகண்டின் பித்தோராகர் மாவட்டத்தின் தொலைதூர பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு சென்று, ITBP வீரர்கள் இறந்த நபரின் உடலை அவர் குடும்பத்திடம் ஒப்படைந்த்தனர்.

உத்தராகண்டின் பித்தோராகர் மாவட்டத்தின் முன்னோக்கி பதவியான பாக்தயார் அருகே சியுனி கிராமத்தின் எல்லைப்புற கிராமத்தில் 30 வயது உள்ளூர் இளைஞர் மரணம் குறித்து ITBP 14 வது படைக்கு தகவல் கிடைத்தது.

ITBP வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்து உடலைப் பாதுகாத்தனர். இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை மூடப்பட்டிருந்தது. நிலைமையை உணர்ந்த ITBP வீரர்கள், உள்ளூர்வாசிகளின் உதவியுடன், உடலை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து, சுனியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள முன்சியாரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

முன்சியாரிக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமானதாகவும், கற்கள் மற்றும் கற்பாறைகள் நிறைந்ததாகவும் இருந்தபோதிலும், ITBP குழு எல்லா வழிகளிலும் மிகவும் கவனமாக நகர்ந்தது. மொத்தம் 8 வீரர்கள் உடலை மாறி மாறி தூக்கி வந்தனர். சுனியில் இருந்து சுமார் 25 கி.மீ தூரம் நடந்து இறந்தவரின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.Tags : border guards ,Tibetan ,Indo , Indo-Tibetan border security, humanitarian
× RELATED பண்டிகை காலங்களில் எல்லை வீரர்களை...