×

கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி : தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்!

பனாஜி : கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத் துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நலப் பணிகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,  “அறிகுறிகள் இல்லை எனினும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நான் கொரோனாவுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். தொடர்ந்து வீட்டில் இருந்து எனது கடமையை மேற்கொள்வேன்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நாள்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு முதல்வர் சாவந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Pramod Sawant ,Goa , Goa Chief Minister Pramod Sawant confirmed coronavirus infection
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...