×

ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று நேற்று காலை கெத்தள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர், அங்குள்ள சாலையில் உலா வந்தது.

இதனைக்கண்டு கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். தங்களது வீடுகளுக்குள் மறைந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பட்டாசு வெடித்து ஒற்றை யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். ஒற்றை யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : city , single ,elephant, roars , city
× RELATED ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்