×

தேன்கனிக்கோட்டை அருகே சூறைகாற்றுடன் பலத்த மழை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி, கக்கதாசம், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அந்தேவனப்பள்ளியில் சுறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது, அதில் கடைகள் முன் அமைக்கப்பட்டிருந்த இரும்பு மேற்கூறைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுந்தன.

குந்துக்கோட்டை அஞ்செட்டி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால், அஞ்செட்டி தொட்டல்லாவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள மலை பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால், தேன்கனிக்கோட்டை அதன் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த இரு தினங்களாக லேசான மழை மட்டும் பெய்து வருகின்றது.



Tags : Dhenkanikottai , Heavy ,rain ,hurricane, Dhenkanikottai
× RELATED யானை தாக்கி விவசாயி பலி