×

ராமநாதபுரத்தை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் : இயற்கை, தொல்பொருள் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் அதிகளவில் விளைச்சல் செய்யப்படுகிறது. மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடல் அமைந்துள்ளதால், மற்ற மூன்று பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இங்கு மானாவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. பருவமழை பெய்ய தவறினால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி, மன்னார்வளைகுடா கடல் எல்கையானது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் முதல் சாயல்குடி அருகே வேம்பார்(தூத்துக்குடி மாவட்டம்) வரையிலும் அமைந்துள்ளது. இங்கு அரியவகை பவளப்பறைகள், டால்பின், கடற்பசு, கடல்ஆமை போன்ற அரியவகை மீன்கள், கடல் பஞ்சு, கடல் தாவரங்கள், சங்கு இனங்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இவற்றை பாதுகாத்திட தென் கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக 1974ல் யுனோஸ்காவால் பரிந்துரை செய்யப்பட்டு, மத்தியஅரசால் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1989 முதல் கடல்சார் உயிர்க்கோள காப்பகம், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா தேசிய பூங்காவாகவும் விளங்குகிறது.

இதனை போன்று மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, கீழகாஞ்சிரங்குளம் போன்ற பறவைகள் சரணாலயம் உள்ளன. இங்குள்ள தட்பவெட்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகள் பொறிப்பதற்காக லட்சக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.இதனை போன்று பூலோகத்தின் கற்பக தரு என அழைக்கப்படுகின்ற பனைமரங்கள் மாவட்டத்தில் சுமார் 15 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயம், பனைமரத்தொழில், மீன்பிடிதொழில் என மூன்று முக்கிய தொழில்கள் ஒருங்கே அமைந்துள்ள ஒரே மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் திகழ்கிறது.மேலும் அழகன்குளம், ஆற்றங்கரை உட்பட பகுதிகளில் தொல்லியியல் ஆய்வு நடந்து வருகிறது. இதனை போன்று மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொல்பொருட்களும், பொக்கிஷங்களும் புதைந்து கிடக்கிறது. இதனை பாதிக்கும் வகையில் மாவட்டத்தில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம், எரிவாயு கிணறுகள் அமைக்க ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இவற்றை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக தமிழகஅரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் கூறுகையில், ‘‘பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம், எரிவாயு கிணறுகள் அமைக்க ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் விவசாயம், கடல்வாழ் உயிரினங்கள், பனைமரங்கள், பறவைகள் மற்றும் தொல்பொருள் பொக்கிஷங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள், பனைமர தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக தமிழகஅரசு அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Ramanathapuram ,Archaeologists ,archeology activists , Ramanathapuram ,declared ,protected , insist
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...