அலிகார் சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக வேகத்தடை அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அலிகார் சாலை பகுதியில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக சாலையில் வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட அலியார் சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் சாலையை கடந்து செல்லும்போது வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.பூவாணிக் கரை, பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக வாகன விபத்துகளை தடுப்பதற்கு வேகத்தடை அமைத்து தருமாறு இளைஞர் மஸ்ஜித் சேவைக்குழு சார்பாக ஆர்.எ.மங்கலம் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏதும் நடைபெறும் முன் பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் விரைவில் வேகத்தடை அமைத்து தர முன்வர வேண்டும் என்றனர்.

Related Stories: