×

கொடைக்கானல் கீழ்மலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்ததை வீடியோ எடுத்தவர் அதிரடி கைது!

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை கேசிபட்டியில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பன்னைக்காடு அருகே உள்ள கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். டிரைவராக உள்ளார். இவர் மாலதி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக் காட்டில் சதீஷக்கு அவரது பெற்றோர்களால் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது, இதனை அறிந்த மாலதி கே.சி.பட்டியில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.

இந்நிலையில் காதலன் வீட்டு முன்பு நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய மாலதியை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அடித்து உதைத்து துன்புறுத்தி தகாத வார்த்தையால் திட்டி துரத்தியதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த மாலதி காதல் கணவன் வீட்டு முன் உள்ள சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே மாலதி இறந்தார். தீவைத்துக் கொள்ளும் முன் மாலதி சாலையோரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் தனது குழந்தையை அமர வைத்துவிட்டு இந்த செயலை செய்துள்ளார். மாலதி தன் மீது பெட்ரோல் ஊற்றிய நிலையில் அங்கிருந்த சதீஷ் குடும்பத்தினர் தடுக்காமல் இருந்தது அதிர்ச்சியடைய செய்கிறது.

இத்தனை சம்பவங்களையும் எந்த வித கேமரா அசைவுமின்றி அப்படியே ஒருவர் படம் பிடித்திருந்தார். சின்னஞ்சிறிய குழந்தையை விட்டு தீக்குளிக்கும் பெண்ணை அங்கிருந்தவர்களோ, தீப்பெட்டி கொடுத்தவரோ, இந்த வீடியோவை எடுத்தவரோ காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இவற்றில் ஒன்றும் கூட நடக்கவில்லை. மனித நேயம் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த சம்பவம் உள்ளது எ ன பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளபர். மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்து கைதான சரவணக்குமார்,  மாலதியை ஏமாற்றிய சதீஷின் அண்ணன் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து மாலதியை ஏமாற்றிய சதீஷ் மற்றும் வீடியோ எடுத்த சரவணக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : suicide ,fire ,hills ,Kodaikanal ,hill , Kodaikanal, Keelmalai, teenager, Malathi, firefighter suicide, video, arrest
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...