×

தஞ்சை அருகே சாரலுடன் ஆலங்கட்டி மழை

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை அருகே சாரலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மகிழ்ச்சியில் மக்கள் திளைத்தனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் சாரலுடன் மழை பெய்யத்தொடங்கியது.

சிறிது நேரத்தில் ஐஸ் கட்டிகளாக விழத்தொடங்கியது. இதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அரை மணி நேரம் ஐஸ் கட்டிகளாக வீடுகளின் கூரையிலும், தெருவிலும் விழுந்தன.இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் சின்னத்துரை கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பகுதியில் இது போன்று ஆலங்கட்டி மழை பெய்தது. மக்கள் அனைவரும் மழையாக பொழிந்த ஐஸ் கட்டிகளை கையில் எடுத்து பார்த்து வியந்தனர் என்றார்.

Tags : Tanjore , Hail ,showers ,Tanjore
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை