×

பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கி வருகிறதா ?: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஃபேஸ்புக் நிறுவனம் இன்று விளக்கம்!!

டெல்லி : ஃபேஸ்புக் தளத்தில் பாஜக கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளது. சமீபகாலமாக ஃபேஸ்புக் இணையதளத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கட்டுரை இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஃபேஸ்புக்கின் பாஜக ஆதரவு நிலைப்பாடு புகார் குறித்து நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து ஃபேஸ்புக் நிர்வாகிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஃபேஸ்புக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வால் ஸ்ட்ரீட் ஜூர்னலின் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவும் நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே  ஃபேஸ்புக் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி செய்யப்படுவதாக அதன் இயக்குநர் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Parliamentary Standing Committee , BJP, Comments, Facebook, Company, Parliament, Standing Committee, Company, Description
× RELATED தன்னை முன்னிலைப்படுத்த ராமதாஸ்...