×

பாலியல் பலாத்காரத்தால் பாதித்த சிறுமி குடும்பத்திற்கு 1.50 லட்சம் இழப்பீட்டு தொகை: காவல் ஆணையர் வழங்கினார்

சென்னை: அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2018ல் சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில், சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி உட்பட 4 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகளும், மற்ற 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு தொகையாக ரூ.1.50 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றியவர்களை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார். மேலும், இழப்பீட்டு தொகை ரூ.1.50 லட்சத்திற்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் அவர் வழங்கினார்.




Tags : Commissioner of Police ,rape ,girl victim , 1.50 lakh ,compensation,family , girl ,Police
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...