×

திருநாகேஸ்வரத்தில் ராகுபெயர்ச்சி விழா

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமிகோயிலில் உள்ளது. இங்கு, ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் அருள்பாலிக்கிறார். ஐதிகப்படி, நேற்று மதியம் 2.16  மணிக்கு ராகுபகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு உற்சவர் ராகுபகவானுக்கு சிறப்பு யாகம்  நடைபெற்றது.

இதேபோல், சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.  ஞானகாரகன் என்ற அழைக்கப்படும் கேது பகவான் 2.16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிகத்துக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி சிறப்பு யாகம்,  தீபாராதனை நடந்தது.



Tags : shift ceremony ,Thirunageswaram Rahu ,Thirunageswaram , Thirunageswaram, Rahu shift ,ceremony
× RELATED குன்றத்தூரில் மின்மாற்றியில் ஏறி போதை வாலிபர் குத்தாட்டம்: வீடியோ வைரல்