×

கிராம உதவியாளர் அடித்து கொலை?

தாம்பரம்: பல்லாவரத்தை சேர்ந்தவர் சங்கர் ராஜ் (52). பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணி  புரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை அலுவலகத்தின் பின்னால் உள்ள இடத்தில் வழக்கம் போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 நீண்ட நேரமாகியும்  அவர் அலுவலகத்திற்கு திரும்பி வராததால், உடன் வேலை செய்பவர்கள் சென்று பார்த்தபோது சங்கர்ராஜ் ரத்த காயங்களுடன் உயிரிழந்து  கிடந்துள்ளார்.தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு  செய்து கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Village assistant ,death , Village ,Assistant, Beaten ,death?
× RELATED வேப்பூர் அருகே திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம சாவு கணவர் அதிரடி கைது