×

எஸ்சிஓ கூட்டம் ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: லடாக்கின் பாங்காங்க் திசோ பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதைத் தொடர்ந்து, இந்திய-சீன எல்லையில் மீண்டும் அமைதி  சீர்குலைந்துள்ளது. எல்லையில் பதற்றம் ஏற்பட இந்தியாவே காரணம் என சீனாவும், சீனாவே காரணம் என இந்தியாவும் குற்றம்சாட்டுகின்றன.  இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க  உள்ளது. இதில் பங்கேற்க ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.

கூட்டத்தில் பங்கேற்கும் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி செய்கு மற்றும் பிற முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது  ராணுவ தளவாடங்கள் கொள்முதல் தொடர்பான பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் சீன  பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்க்கியும் பங்கேற்க இருக்கிறார். ஆனால், சீன அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுநடத்துவதற்கான எந்த திட்டமும்  இல்லை என கூறப்பட்டுள்ளது. எஸ்சிஓ கூட்டத்தில், பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.Tags : Rajnath Singh ,Russia ,meeting ,SEO , SEO , Rajnath Singh , Russia
× RELATED பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்