×

புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் பதவியேற்பு

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் பொறுப்பேற்றுள்ளார்.தலைமை தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்த அசோக் லவசா, ஆசிய வங்கியின் துணைத்தலைவர் பணிக்கு  சமீபத்தில் சென்றார். இதனால் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று அவர்  பதவியேற்றுக் கொண்டார். 1984ம் ஆண்டு ஜார்க்கண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தன் பணியைத் தொடங்கிய ராஜிவ், பல்வேறு அரசு துறைகளில் 36  வருடங்களுக்கு மேலாகப் பணி புரிந்த அனுபவம் உள்ளவர். மத்திய அரசு பணிகள் மட்டுமின்றி ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநில அரசு நிர்வாகத்திலும்  பணிபுரிந்திருக்கிறார். சமீபத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத் தேர்வு வாரியத்தில் தலைமை அதிகாரியாகவும் பணிபுரிந்து வந்தார்.

அரசு விதிமுறைகளின்படி தேர்தல் ஆணையர் பதவியேற்பவர் 6 ஆண்டுகளுக்காவது பதவி வகிக்க வேண்டும் அல்லது 65 வயது வரை தேர்தல்  ஆணையராகப் பதவியில் இருக்க வேண்டும். 2025ம் ஆண்டு வரை ராஜிவ் குமார் பணிபுரிவார் என்பதால், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை  நடத்தும் அதிகாரியாகவும் ராஜிவ் குமார் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rajiv Kumar , Rajiv Kumar ,takes , new, Election, Commissioner
× RELATED புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக...