×

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் வீட்டில் தங்க அனுமதி: மாநிலத்தில் தனிமைப்படுத்தும் முறை ரத்து

சென்னை:  வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு 14 கட்டாய தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர கடந்த மே மாதத்திலிருந்து சிறப்பு மீட்பு விமானங்கள்  இயக்கப்படுகின்றன. மே முதல் ஆகஸ்ட் வரை இதுவரை 254 மீட்பு விமானங்கள் மூலம் 34,109 இந்தியர்கள் சென்னைக்கு வந்தனர். அதேபோல  திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் வந்த மீட்பு விமானங்களில் வந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 73,116 இந்தியர்கள் மீட்கப்பட்டு  தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை வழிகாட்டி நெறிமுறைப்படி விமானங்களில் வருபவர்களுக்கு கொரோனா  பரிசோதனை மற்றும் கட்டாயமாக 14 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். இதற்கிடையே மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 8 ம் தேதியிலிருந்து தனிமைப்படுத்துதலில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி  வெளிநாடுகளிலிருந்து புறப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு அங்கேயே  கொரோனா மருத்துவ பரிசோதணை செய்து நெகடிவ் சான்றிதழ்களுடன்  வருபவார்கள் நேரடியாக வீடுகளுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த தளர்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல்  விதிமுறைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கின. ஆனால் தமிழக சுகாதாரத்துறை மட்டும் அந்த புதிய  திட்டத்தை அமல்படுத்தப்படவில்லை. இதுபற்றி தினகரன் நாளிதழில் செய்திகள் வந்தன.

இந்நிலையில் மத்திய அரசின் தளர்வுகளுடன் கூடிய  தனிமைப்படுத்துதல் திட்டத்தை நேற்று முதல் அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி  குவைத்திலிருந்து நேற்று அதிகாலை 3.40 மணிக்கு 134 இந்தியர்களுடன் ஏர் இந்தியா எகஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த  பயணிகளை மருத்துவ குழுவினர் சோதித்தனர் .அவர்களில் ஏற்கனவே பரிசோதித்து மருத்துவ சான்றிதழ்களுடன் வந்தவர்களின் கைகளில் ரப்பர்  ஸ்டாம்பு முத்திரையிட்டு வீடுகளுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பினர். சான்றிதழ்கள் இல்லாமல் வந்தவர்களுக்கு மட்டும் சென்னை விமான  நிலையத்திலேயே இலவச கொரோனா மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். பின்பு அவர்கள் கைகளிலும் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகள் போட்டு  அவரவர் வீடுகளுக்கு தனிமைக்கு அனுப்பினர். அவர்கள் அனைவருக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்திலேயே சிறப்பு கவுண்டர் அமைத்து  இ பாஸ்கள் போட்டு கொடுக்கின்றனர்.  



Tags : Passengers ,abroad ,Tamil Nadu ,state ,home ,Air , Coming ,Tamil Nadu, abroad,home,Isolation ,system , state
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!