×

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க டிவிட்டர் பக்கம்: போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் புகார் அளிக்கும் முறையை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ேநற்று தொடங்கி வைத்தார்.சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்ட பிறகு கடந்த ஓராண்டாக பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து மகளிர் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அதைதொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் மூலம் புகார் அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி சென்னை  வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உரிய விழிப்புணர்வு மற்றும்  புகார்கள் அளிக்கும் வகையில் Greater Chennai Police - Crime against Women & Children பேஸ்புக் பக்கம் மற்றும்  Twitter@cawcchennai என்ற டிவிட்டர் பக்கம் என்ற செயலிகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். இந்த  நிகழ்ச்சியின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

Tags : women ,Police Commissioner ,Commissioner of Police , Regarding ,crimes ,women To complain,Commissioner ,Police, Started
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...