×

தங்கம் கடத்தல் வழக்கு கேரள தலைமை செயலகத்தில் என்ஐஏ மீண்டும் விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று 3வது முறையாக தலைமை செயலகத்தில் விசாரணை  நடத்தினர். திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா பலமுறை தலைமை செயலகத்திற்கு வந்து சென்றது என்ஐஏ  விசாரணையில்  தெரிய வந்தது. சொப்னா கேரள முதல்வர்  பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மற்றும் முதல்வர்  அலுவலகத்தை சேர்ந்த சிலரை அடிக்கடி சந்தித்து பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமை செயலகத்தில் உள்ள  கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ள காட்சிகளை பரிசோதிக்க என்ஐஏ தீர்மானித்தது.

இது தொடர்பாக  2 முறை என்ஐஏ அதிகாரிகள் தலைமை செயலகத்திற்கு சென்று  விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் தலைமை செயலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் பரிசோதித்தனர். தலைமை செயலகத்திற்கு என்ஐஏ அடிக்கடி வந்து பரிசோதிப்பது  கேரளாவுக்கு அவமானம் என பாஜ தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார்.

Tags : NIA ,Kerala ,Kerala General Secretariat ,NIA re-investigates , Gold ,smuggling ,case NIA ,
× RELATED கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை...