×

சென்னை- கொல்கத்தா விமான சேவை தொடக்கம்

சென்னை: கொரோனா காரணமாக மேற்கு மாநிலத்திற்கு பயணிகள் விமானங்கள் வரக்கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து  சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணிகள் விமான சேவைகள் கடந்த ஜூலை 6ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க அரசு விதித்திருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. மேற்கொண்டு தடை நீடிக்கப்படாததால்  மேற்கு வங்க  மாநிலத்திற்கு  மீண்டும் பயணிகள் விமான சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது. 57 நாட்களுக்கு பின்பு சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு   நேற்று விமான சேவைகள் தொடங்கியதால் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Tags : Launch ,Chennai ,flight Launch ,Kolkata ,flight , Launch ,Chennai-Kolkata, flight
× RELATED நகரும் நியாய விலை கடை துவக்கம்