தி.நகர் திருமலை திருப்பதியில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம்: தமிழக தலைவர் சேகர் தகவல்

சென்னை: தி.நகர் திருமலை திருப்பதி கோயிலில் பொதுமக்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக தலைவர் சேகர்  அறிவித்துள்ளார். கொரோனா 8ம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஏற்கனவே 7ம் கட்ட ஊரடங்கில் கிராமப்புறங்களில் உள்ள சிறிய  கோயில்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் கீழ் வருவாய் வரும் கோயில்களை மட்டுமே திறக்க அனுமதி அளித்தது. ஆனால், இந்த ஊரடங்கில்  கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அனைத்து கோயில்களையும் திறக்க உத்தரவிட்டுள்ளது.

 அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முதல்  அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள பிரசித்திபெற்ற திருமலை திருப்பதி  கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது.இது குறித்து சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஏ.ஜே.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இன்று காலை 7.30-10.30,  11.30-2, மாலை 4-7 மணி வரையில் என மூன்று பகுதிகளாக பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், முகக்கவசம்  அணிந்து  சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’ என்று கூறியுள்ளர்.

Related Stories:

>