×

தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு

சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. எனினும், நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சிலியில் கடந்த ஜூன் மாதம் இதேபோல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 6.8 என்ற அளவில் பதிவாகியது. இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும், தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு என, அழைக்கப்படும் பசிபிக் ரிங் ஆப் ஃபயரின் ஒரு பகுதி சிலியையும் உள்ளடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : Chile ,magnitude earthquake , 6.8 magnitude, earthquake ,shakes Chile
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு