×

இந்திய-சீன எல்லையில் எப்போதும் ஸ்திரத்தன்மையையே சீனா பரமாரிக்க விரும்புகிறது: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ

பிரான்ஸ்: இந்திய-சீன எல்லையில் எப்போதும் ஸ்திரத்தன்மையையே சீனா பரமாரிக்க விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர்,  இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், இந்திய-சீன எல்லையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் பிரச்சினைகளை சீனா முதலில் ஆரம்பிக்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை இன்னமும் பிரிக்கப்படவில்லை என்பதால் இது போன்ற பிரச்சனைகள் எப்போதும் ஏற்படுகிறது. இந்திய-சீன எல்லையில் எப்போதும் ஸ்திரத்தன்மையையே சீனா பரமாரிக்க விரும்புகிறது. சூழ்நிலையை நாங்கள் முதலில் சிக்கலாக்குவதில்லை.

ஆனாலும் எங்கள் பகுதியின் இறையாண்மையையும் பிராந்திய ஒர்மையையும் உறுதியாகப் பாதுகாப்போம். உரையாடல் மூலம் எந்த பிரச்சினைகளையும் பேசவும் தீர்க்கவும் தயாராக இருக்கிறோம். இருதரப்பு உறவுகளில் விவகாரங்களை முறையான இடத்தில் வையுங்கள், பேசுவோம். வித்தியாசங்கள் எப்போதும் மோதலுக்கு வழிவகுக்கக் கூடாது. வித்தியாசங்களை அந்த மட்டத்திலேயே தீர்த்து விடுதலே நலம். பிரதமர் மோடியும் அதிபர் ஜின்பிங்கும் நிறைய சந்தித்திருக்கிறார்கள். பல கருத்தொற்றுமைகள் அவர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. இருதரப்பு ஒற்றுமை வித்தியாசங்களை சரிகட்டி விடும். பொதுநலன்கள் மோதல்களை தடுத்து விடும், என்று கூறியுள்ளார். 


Tags : Wang Yi ,Indo-China ,border ,Chinese , India, China, Border and Foreign Minister Wang Yi
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...