×

'பேஸ்புக்கில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்படும்'!: ஆஸ்திரேலிய அரசுக்கு முகநூல் நிறுவனம் எச்சரிக்கை

ஆஸ்திரேலியா: பேஸ்புக்கில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்படும் என்று ஆஸ்திரேலிய
அரசுக்கு முகநூல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஸ்பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழி வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதன் மூலம், கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் 6 பில்லியன் டாலர் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஸ்பேஸ்புக் நிறுவனம், ஸ்பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக எச்சரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் விளம்பர வருமானம் ஊடகங்கள் இழந்து வரும் நிலையில், ஊடங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானம் பார்த்து வருகின்றன.

இதற்கு கடிவாளம் போடும் வகையிலேயே ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. முன்னதாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியான கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு, கூகுள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்பேஸ்புக்கில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு முகநூல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Australian , Facebook , Australia ,media stories, tax,
× RELATED பேஸ்புக், டிவிட்டருக்கு சம்மன்