×

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்தி...: ஹாங்காங்கில் ஒரே நாளில் 5 லட்சம் பரிசோதனை நடத்த அரசு திட்டம்!

ஹாங்காங்: கொரோனா வைரசை ஒழிக்க ஹாங்காங்கில் ஒரே நாளில் 5 லட்சம் மக்களுக்கு பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.  இதுகுறித்து தெரிவித்துள்ள ஹாங்காங் சுகாதாரத்துறை, ஹாங்காங்கில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். தற்போது ஒரு நாளுக்கு 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகியுள்ள மக்களிடம் இருந்து கொரோனா சங்கிலி பலப்படுகிறது. ஆகவே இவர்களைக் கண்டறிந்து குணப்படுத்திவிட்டால் கொரோனாவின் சங்கிலித் தொடரை உடைக்கலாம்.

இதற்காக, அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகியுள்ளவர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குடிமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இன்று காலை 8:00 மணிக்குத் துவங்கிய இந்தப் பரிசோதனை, 100 பரிசோதனை நிலையங்களில் நடத்தப்படுகிறது. இதற்காக 5,000 முழுநேரம் மற்றும் பகுதிநேர தன்னார்வலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. இதுவரை இந்த சோதனைக்கு 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டு வாரங்களில் இந்த பரிசோதனைக்கு மேலும் 5 மில்லியன் மக்கள் ஆதரவு தருவார் என நம்புகிறோம், என கூறப்பட்டுள்ளது.



Tags : Hong Kong ,Government , Corona, Hong Kong, testing
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...