×

சமூகத்தில் விரைவாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா பேரழிவுக்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும்: WHO எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சமூகத்தில் விரைவாக அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது கொரோனா மூலம் நடக்கும் பேரழிவுக்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 84.80 லட்சம் பேர் உயிரிழந்தனர். தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனை கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால் கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானன் கெப்ரியேசஸ், சமூகத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நாடுகள் விரைவாகத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. அதேபோல கொரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்துவது அவசியம்.

ஆனால் ஒருபுறம் கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கை வாழ அனுமதித்துவிட்டு, மறுபுறம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துகிறேன் என்று கூறினால் இரண்டுக்கும் சமநிலையை உண்டாக்க முடியாது. சமூகத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதிப்பது, கொரோனா மூலம் வரும் பேரழிவுக்கு வழிகாட்டுவதற்கு இணையாகும்.

4 முக்கிய அம்சங்களை நாடுகள் முக்கியமாகப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக சமூகங்களும், தனி நபர்களும், மொத்தமாக கூடும் நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும். இரண்டாவது கொரோனாவில் எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை, வயதினரைப் பாதுகாக்க வேண்டும். மூன்றாவது மக்கள் ஒவ்வொருவரும் சுயமாகத் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நான்காவது கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, பரிசோதனை செய்வது, சிகிச்சையளிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.



Tags : deregulation ,corona disaster ,WHO ,Corona , Corona, World Health Organization
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...