×

ரசிகர்கள் அதிர்ச்சி!: சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் நிதி சிக்கலால் மூடல்..!!

சென்னை: வடசென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது. 1967ம் ஆண்டு தண்டையார்பேட்டையில் தொடங்கப்பட்ட அகஸ்தியா திரையரங்கம் புகழ்பெற்ற தேவி திரையரங்க குழுமத்தால் நடத்தப்பட்டு வந்தது. 1004 இருக்கைகளுடன் கூடிய அகஸ்தியா திரையரங்கில் அதிகபட்ச கட்டணமே 80 ரூபாய் தான். மால்களின் வருகை, புதிய திரைப்படங்கள் கிடைக்காதது போன்றவற்றால் கடந்த 3 ஆண்டுகளாக வருமானம் குறைந்துகொண்டே வந்துள்ளது.

இருப்பினும் கடந்த 5 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி வந்திருக்கிறது அகஸ்தியா திரையரங்க நிர்வாகம். தொடர்ந்து, கொரோனா ஊரடங்கில் நிலைமை மோசமாகியதால் அகஸ்தியா திரையரங்கம் மூடுவிழா கண்டிருக்கிறது. 70 எம்.ஏம். எனப்படும் அகன்ற திரை கொண்ட சென்னையின் முதல் திரையரங்கம் அகஸ்தியா. பாமா விஜயாவில் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக வெளியிடப்பட்ட ரகசிய போலீஸ் 115 வரை பல லட்சம் படங்கள் அகஸ்தியாவில் திரையிடப்பட்டிருக்கின்றன.

அதோடு பல திரைப்பட படப்பிடிப்புகளும் இத்திரையரங்கில் எடுக்கப்பட்டுள்ளது. வடசென்னை மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுவது அப்பகுதி மக்களை சோகமடைய செய்திருக்கிறது. வடசென்னையில் 70 ஆண்டுகளை கடந்து இயங்கி வந்த மஹாராணி திரையரங்கு ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து அகஸ்தியா திரையரங்கமும் இன்றோடு மூடப்படுகிறது.



Tags : Agasthiya Theater ,Fans ,Chennai , agastya theatre
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...