×

கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கியது!!

புதுடெல்லி: கடும் எதிர்ப்புக்கு இடையே ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. இந்நிலையில், ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.

இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இத்தேர்வை நாடு முழுவதும் 8.58 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அவர்களின்  உடல்வெப்ப நிலை பரிசோதனை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் முழுவதும் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு தேர்வு ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்வை நடத்த அனைத்து மாநில முதல்வர்களும் ஒத்துழைப்பு தர வேண்டுமெனவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தேர்வை தொடர்ந்து நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடக்க உள்ளது. அந்த தேர்வை 15.97 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

Tags : protests ,country , JEE Main Exam started across the country amid fierce protests !!
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...