×

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப்பட்டியல் வெளியீடு: 4 மண்டலங்களில் 1,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,35,597 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,19,626 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,747 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,224 ஆக உள்ளது.

சென்னையில் 60.61% ஆண்களும் 39.39% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(01.09.2020) மட்டும், 13,143 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (செப்டம்பர் 01) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    4,005
2     மணலி        1,957
3     மாதவரம்        4,241
4     தண்டையார்பேட்டை   10,606
5     ராயபுரம்        12,264
6     திருவிக நகர்        9,139
7     அம்பத்தூர்        8,230
8     அண்ணா நகர்    13,607
9     தேனாம்பேட்டை    11,871
10     கோடம்பாக்கம்    13,697
11     வளசரவாக்கம்    7,401
12     ஆலந்தூர்        4,135
13     அடையாறு       9,034
14     பெருங்குடி        3,763
15     சோழிங்கநல்லூர்    3,140
16     இதர மாவட்டம்    2,536.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    304
2     மணலி        157
3     மாதவரம்        554
4     தண்டையார்பேட்டை    786
5     ராயபுரம்        939
6     திருவிக நகர்        9,80
7     அம்பத்தூர்        1,067
8     அண்ணா நகர்    1,578
9     தேனாம்பேட்டை    953
10     கோடம்பாக்கம்    1,439
11     வளசரவாக்கம்    968
12     ஆலந்தூர்        802
13     அடையாறு        1,239
14     பெருங்குடி         564
15     சோழிங்கநல்லூர்    581
16     இதர மாவட்டம்   323 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : zones ,persons ,Chennai , Chennai, Corona, Corporation, Zone, Treatment
× RELATED மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக...