×

வாலிபர் மீது தாக்குதல் உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். தண்ணீர் கேன் விநியோகிக்கும் வேலை செய்கிறார். கடந்த வாரம் சாலை ஓரத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு தண்ணீர் கேன் விநியோகம் செய்தார். அப்போது, கார் ஒன்று சுபாஷின் பைக் மீது மோதியது. இதை சுபாஷ் தட்டிக்கேட்டார். இதனால் சுபாஷை, காரில் இருந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுபாஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சுபாஷூக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் பூந்தமல்லி - அரக்கோணம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், மப்பேடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனல் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Tags : attack ,Relatives ,road , Walipur, attack, relatives, road block
× RELATED பழனியில் போலீஸ் தாக்கியதாக கூறி...