×

வசந்தகுமார் எம்பி மறைவு குமரிஅனந்தன் உண்ணாவிரதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கை:
எங்கள் தோட்டத்தில் முளைத்து வேர் பரப்பி நாலாப்பக்கமும், கிளை விரித்து பலருக்கு நிழலும், கனியும் கொடுத்த, என் தந்தை கேட்டதற்கு இணங்க நான் பெயர் வைத்த வசந்த் என்ற ஆலமரம் மறைந்து விட்டது என்ற செய்தி அறிந்து தன் சுயநினைவு இழந்து விட்டேன். உடனடியாக இங்குள்ள மருத்துவ வசதி கொண்டு என்னை தேற்றினார்கள். எனினும் என் மனது சஞ்சலத்துடன் மிக வருத்தத்துடனும் இறைவா அவருக்கு ஆத்ம சாந்தி கொடு என்று உண்ணா நோன்பு இருந்து உன் பாதம் பிடித்து கண்ணீர் மல்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vasantha Kumar ,Kumari Anandan , Vasanthakumar MP, Deceased, Kumari Anandan, Fasting
× RELATED சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்...