×

கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்த அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு: பாஜ குற்றச்சாட்டு

மதுரை: கூட்டணியில் பிளவு ஏற்படுத்தவே அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்களோ என சந்தேகம் எழுவதாக பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் எல்லை மீறி பேச வேண்டாம். கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக அரசை நான் என்றும் விமர்சனம் செய்து பேசியதில்லை. தமிழக அரசு அதிகாரிகள் செய்யும் தவறை சுட்டி காட்டி வருகிறேன். அமைச்சர்கள் பாஜவை விமர்சனம் செய்து பேசுவது கூட்டணிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. கூட்டணியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் சர்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்களா என சந்தேகம் எழுகிறது. சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,ministers , Within the coalition, to cause division, ministers, controversy talk, BJP accusation
× RELATED பிரதமர் மோடி உரைக்கு சில...