×

மோர்கன், மாலன் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

மான்செஸ்டர்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டி20 போட்டியில் கேப்டன் மோர்கன் மாலன் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் 56 ரன் (44 பந்து, 7 பவுண்டரி), பக்கார் ஜமான் 36 ரன், முகமது ஹபீஸ் 69 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

பான்ட்டன் 20, பேர்ஸ்டோ 44 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் இயான் மோர்கன் 66 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), மொயீன் அலி 1, சாம் பில்லிங்ஸ் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மாலன் 54 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), கிரிகோரி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 3, ஹாரிஸ் ராவுப் 2 விக்கெட் வீழ்த்தினர். மோர்கன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

Tags : England ,win thrill ,Morgan ,Malone , Morgan, Malone Action, England, Thrill hit
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது