ஓபிசி உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த ரோகிணி ஆணைய அறிக்கை எங்கே? ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், இட ஒதுக்கீட்டின் பயன்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் சென்றடையவில்லை. அந்தக் குறையை போக்கவே ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மிகவும் சிறப்பானது. அந்நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ, அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் ஏமாற்றமளிக்கிறது. 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய ரோகிணி ஆணையம், 33 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதுவரை ஆணையத்திற்கு 9 முறை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதைய பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்கு முன்பாவது அறிக்கையை தாக்கல் செய்யுமா? என்பது தெரியவில்லை. நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டு, உடனடியாக செயல்படுத்தப்பட்டால் மட்டும் தான் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்படும் சமூகநீதி துரோகங்களுக்கு முடிவு கட்ட முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More