×

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

சென்னை: பாஜக மூத்த தலைவர் எல்.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான இல.கணேசன்(75), சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். தமிழக பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கட்சியினர், தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதற்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தனது பேஸ்புக் பக்கத்தில் இல.கணேசன் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “ வீட்டில் நலமாக இருக்கிறேன். பரிசோதனைக்கு சென்று திரும்பினேன். அவ்வளவே. நலம் விசாரிப்பு அழைப்புகளைத் தவிர்க்க வேண்டுகிறேன். தங்கள் அனைவரின் மேலான அக்கறைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Ila Ganesan ,BJP ,Corona , BJP senior leader Ila Ganesan, Corona
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...