×

வரும் 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வரும் 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஊரடங்கில் மத்திய அரசு அளித்த தளர்வுகளால் கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் சிறப்பு ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதன்படி ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் செப்.15ம் தேதிவரை இந்த ரத்து தொடரும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி திருச்சி - செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி - செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை - விழுப்புரம், கோயம்புத்தூர் - காட்பாடி, அரக்கோணம் - கோயம்புத்தூர், திருச்சி - நாகர்கோவில், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஆகிய 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Southern Railway , Southern Railway announces cancellation of special trains till 15th
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...